Last Updated : 20 Dec, 2017 03:32 PM

 

Published : 20 Dec 2017 03:32 PM
Last Updated : 20 Dec 2017 03:32 PM

சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 19 பேர் பலி

சிரியாவின் இட்லிப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 19 பேர் பலியாகினார்.

இதுகுறித்து சிரியாவை உன்னிப்பாக கண்காணித்து வரும் இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறும்போது, "சிரியாவின் வடமேற்கு நகரத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 19 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலை ரஷ்யா நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மீது ரஷ்யா அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x