Published : 25 Aug 2023 09:00 AM
Last Updated : 25 Aug 2023 09:00 AM
புதுடெல்லி: நேபாளத்தில் மாதேஷ் மாகாண மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 6 இந்திய யாத்ரீகர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து காத்மாண்டு போஸ்ட் தெரிவித்துள்ளதாவது: ராஜஸ்தானில் இருந்து யாத்ரீகர்களை ஏற்றி சென்ற பேருந்து வியாழன் அதிகாலையில் சிமாரா சப்-மெட்ரோபாலிட்டன் சிட்டியில் உள்ள சூரியமாய் கோயிலுக்கு அருகில் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள ஆற்றங்கரையில் 50 மீட்டர் தொலைவில் சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 6 இந்தியர்கள் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஓட்டுநர்ஜிலாமி கான் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT