Published : 26 Dec 2017 11:37 AM
Last Updated : 26 Dec 2017 11:37 AM
இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் மூவர் பலியானதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் தரப்பில், "காஷ்மீர் மாவட்டத்தின் ராவல்கோட் பகுதியில் இந்திய ராணுவ எல்லை தாண்டி திங்கட்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் எங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் மூன்று பேர் பலியாகினர். இந்திய போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறிவிட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதையடுத்து. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் (47) ஈரானின் சாபஹர் துறைமுகத்தில் வர்த்தகம் செய்து வந்தார். அவர் வர்த்தக விஷயமாக பாகிஸ்தான் சென்ற போது, அந்நாட்டு உளவுத் துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கடத்தி கைது செய்தனர். பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும் சதித் திட்டங்கள் தீட்டியதாகவும் குற்றம் சாட்டி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவை அவரது தாய், மனைவி ஆகியோர் திங்கட்கிழமை சந்தித்துப் பேசினர்.
இந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்தியா சார்பில் எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT