Published : 06 Nov 2017 09:07 PM
Last Updated : 06 Nov 2017 09:07 PM
ஏமனில் தீவிரவாதிகள் நடந்திய தற்கொலைப் படை தாக்குதலில் 29 போலீஸார் உட்பட 35 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ஏமன் அதிகாரிகள் தரப்பில், ''ஏமனின் கடற்கரை நகரமான ஏடனிலுள்ள குற்றவியல் விசாரணை அலுவலகத்தின் நுழைவாயிலில் தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் பாதுகாப்புப் பணியிலிருந்த 29 போலீஸார் உட்பட 35 பேர் பலியாகினர்'' என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து ஏமன் உள்துறை அமைச்சர் கூறும்போது, ''பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் கட்டிடத்துக்கு உள்ளே நுழையாமல் போராடினர்'' என்று கூறியுள்ளார்.
ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபிய ராணுவம் ஹவுத்தி கிளர்ச்சிப் படை மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT