Published : 22 Nov 2017 09:55 PM
Last Updated : 22 Nov 2017 09:55 PM
உபெர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், ஓட்டுநர்களின் தனிப்பட்ட விவரங்களை இணைய திருடர்கள் திருடிய விவரம் வெளியாகியுள்ளது.
சுமார் 5.7 கோடி வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. திருடிய தகவல்கள் வெளியாகாமல் இருக்க அவர்களுக்கு 1 லட்சம் டாலர்கள் தொகையை உபெர் நிறுவனம் வழங்கிய செய்தியும் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு கால் டாக்ஸி நிறுவனமான ‘உபெர்’ உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கால் டாக்ஸிகளை இயக்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளனர். இந்நிலையில் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அந்நிறுவத்தின் வாடிக்கையாளர்கள், 6 லட்சம் ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட 5.7 கோடி பேரின் மொபைல் போன் எண், இமெயில் முகவரி உட்பட தகவல்களை இணையதளத்தில் புகுந்து இந்த தகவல்களைத் திருடியுள்ளனர்.
உபெர் நிறுவனத்தின் விவரங்கள் திருடப்பட்ட நிலையில், அதைத் திருடிய இணையத் திருடர்களுடன், அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
உபெர் நிறுவனத்தின் தகவல்கள் திருடப்பட்ட விஷயம் வெளியாகாமல் இருப்பதற்காக, இணையத் திருடர்களுக்கு 1 லட்சம் டாலரக்ள் தொகையினை உபெர் நிறுவனம் வழங்கியுள்ளது. இதை அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
இதுபற்றி அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தாரா கோரோவ்ஸ்ஷி கூறும்போது, “கடந்த கால தவறுகள் எதையும் அழிக்க முடியாது. 2016-ம் ஆண்டு நடந்த தவறுகள் தற்போது தெரிய வந்துள்ளன. எங்கள் பணி திட்டத்தில் மாறுதல் செய்யப்படும். ஊழியர்களின் துணையுடன் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் நடவடிக்கை எடுப்போம்.
எங்கள் நிறுவனத்தின் விவரங்கள் இணையத் திருடர்கள் மூலம் திருடப்படுவதை தடுத்து நிறுத்த தவறிய இரண்டு ஊழியர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உபெர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் கவலையடைய வேண்டாம்'' எனக் கூறினார்.”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT