Last Updated : 22 Nov, 2017 04:04 PM

 

Published : 22 Nov 2017 04:04 PM
Last Updated : 22 Nov 2017 04:04 PM

உயிரைப் பணயம் வைத்து வடகொரியாவிலிருந்து தப்பிய ராணுவ வீரர்: விரட்டல், துப்பாக்கிச் சூடு வீடியோ வெளியீடு

வடகொரிய ராணுவ வீரர் ஒருவர் சுதந்திரத்தை நோக்கி ஜீப்பிலும் பிறகு இறங்கி ஓடியும் தப்பித்த போது வடகொரிய ராணுவ வீரர்கள் அவரை நோக்கி 40 சுற்றுக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் காயமடைந்தார். அவர் நொண்டியபடியே எல்லையைக்கடந்த போது தென் கொரிய ராணுவ வீரர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர், இது பற்றிய யு.எஸ். - ஐநா வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தப்பித்த ராணுவ வீரரைத் துரத்தி வந்த வடகொரிய ராணுவ வீரர்கள் ஒப்பந்தத்தை மீறி எல்லை தாண்டியும் வந்து தாக்கியுள்ளனர். கடும் காயமடைந்த தப்பித்த ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை செய்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வீடியோவில், ராணுவ வீரர் ஜீப்பில் இருபுறமும் மரங்கள் வரிசையாக உள்ள சாலையில் மிக வேகமாக வந்ததும், வடகொரிய வீரர்கள் அவரை விரட்டியதும், துப்பாக்கிச் சூடு நடத்தியதும் காட்சியாகியுள்ளன. ஜீப்பில் வந்த அவர் வடகொரிய-தென் கொரிய எல்லையில் ஜீப்பை மோதி நிறுத்தி இறங்கி ஓடினார். இவர் மீது வடகொரிய வீரர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். இலைக்குவியல்களுக்கிடையே காயமடைந்த அந்த ராணுவ வீரரை தென் கொரிய ராணுவ வீரர்கள் காப்பாற்றினர்.

ஆனாலும் இருதரப்பினரிடையேயும் துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை.

இது குறித்து கலோனல் கரோல் கூறும்போது, வடகொரியா ஒப்பந்தத்தை மீறி தென் கொரிய பகுதிக்குள் நுழைந்து ஆயுதப்பிரயோகம் செய்தனர் என்றார்.

1950-53 கொரியப் போருக்குப் பிறகு சுமார் 30,000 வடகொரியர்கள் சீனா வழியாக தென் கொரியாவுக்குள் வந்துள்ளனர்.

காயங்களுக்கான சிகிச்சையை மருத்துவர் அளிக்கும் போது ராணுவ வீரரின் கிழிந்த சிறுகுடலிலிருந்து 27செமீ நீளமுள்ள புழுக்கள் எடுக்கப்பட்டுள்ளன. இது வடகொரிய ராணுவத்தின் மோசமான, ஊட்டச்சத்தற்ற உணவு முறை அம்பலமாகியுள்ளது. மேலும் 5 அடி 7 அங்குலம் உயரமுள்ள இந்த ராணுவ வீரர் உடல் எடை 60 கிலோ மட்டுமே இருந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x