Published : 09 Nov 2017 11:26 AM
Last Updated : 09 Nov 2017 11:26 AM
பாகிஸ்தானில் லாகூர் மாகாணத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியாகினர். 51 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் போலீஸ் தரப்பில், ”பாகிஸ்தானின் லாகூர் மாகாணத்திலுள்ள அட்டோக் நகரிலிருந்து ஆன்மிக பயணமாக புறப்பட்ட பேருந்து, ஓட்டுநரின் போதிய அனுபவமின்மையால் கூர்முனையில் திரும்பும்போது பள்ளதாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் அப்பேருந்தில் பயணம் செய்த 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை போலீஸார் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் 4 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகினர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த 2011-ல் இருந்து சுமார் 9,000 சாலை விபத்துகள் நடந்துள்ளதாகவும், இதில் 4,500 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாகவும் பாகிஸ்தான் சாலை போக்குவரத்துத் துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT