Published : 12 Jul 2023 04:45 PM
Last Updated : 12 Jul 2023 04:45 PM

சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் கலக்க தயாராகும் ஜப்பானுக்கு வலுக்கும் எதிர்ப்பு

டோக்கியோ: நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கடலில் விடும் ஜப்பானின் முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

2011-ல் ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 20,000-க்கு அதிகமமான மக்கள் உயிரிழந்தனர். இந்தப் பேரிடரில் மாயமான 1000-க்கும் அதிகமானவர்களை தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் ஃபுகுஷிமா அணுமின் நிலையமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் அழிக்கப்பட்ட அணு உலையில் இருந்த எரிபொருள்களுடன் தொடர்புடைய கதிரியக்க தன்மையுடைய மாசுபடுத்தப்பட்ட நீரை சுத்திகரிக்கும் முற்சியில் ஜப்பான் கடந்த சில ஆண்டுகளாகாக இறங்கியது. அவ்வாறு சுத்தரிக்கப்பட்ட தண்ணீரை ராட்சத தொட்டிகளில் ஜப்பான் சேகரித்து வைத்துள்ளது. தற்போது சுமார் 1.3 மில்லியன் டன் அளவிலான சுத்தம் செய்யப்பட்ட கதிரியக்க நீரை தொட்டிகளில் ஜப்பான் சேகரித்து வைத்திருக்கிறது.

இதில், முதற்கட்ட அளவிலான தண்ணீரை பசுபிக் கடலில் கலக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. ஜப்பானின் இந்த முடிவுக்குதான் அண்டை நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, “ஜப்பான் தண்ணிரைக் கடலில் திறந்தால் கடலின் தன்மையும், கடல் உணவும் பாதிக்கப்பட்டு எங்கள் மீனவர்களின் வழ்வாதாரம் கேள்விக்குறியாகும்” என்று தென் கொரியா கூறி வருகிறது.

சீனாவும் ஜப்பானின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் ஜப்பானின் 10 மாகாணங்களிலிருந்து உணவை இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளது. ஆனால், ஜப்பானோ , சுத்திகரிக்கப்பட்ட நீரில் 80% கதரியக்க தன்மை நீங்கிவிட்டது என்று விளக்கம் அளித்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் தலைவர் ரஃபேல் க்ரோசி கூறும்போது “ஜப்பானின் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை வெளியேற்றும் முடிவு முற்றிலும் தர்க்க ரீதியானது" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கதிரியக்க தண்ணீரை திறந்துவிடும் ஜப்பானின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தென் கொரியா, சீனாவில் மக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x