Published : 22 Jun 2023 12:04 PM
Last Updated : 22 Jun 2023 12:04 PM
நியூயார்க்: மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் உடன் கூண்டுக்குள் நேருக்கு நேர் மோத தான் தயார் என ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்வீட் செய்திருந்தார். இந்த மோதலுக்கு தானும் தயார் என மார்க் ஸூகர்பெர்க் சம்மதம் தெரிவித்துள்ளார். அதோடு மோதலுக்கான நிகழ்விடத்தை அனுப்பவும் என அவர் சொல்லியுள்ளார்.
இதனை இன்ஸ்டாவில் ஸூகர்பெர்க் தெரிவித்திருந்தார். மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரும் இதனை உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில் ‘Vegas Octagon’ என மஸ்க் ட்வீட் செய்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள இந்த இடத்தில் பலவிதமான தற்காப்பு கலை வீரர்கள் போட்டியிடுவது வழக்கம். அந்த வகையில் இங்கு மோதலை வைத்துக் கொள்ளலாம் என்ற தொனியில் மஸ்க் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
காரணம் என்ன? ட்விட்டருக்கு மாற்றாக புதிய சமூக வலைதளம் ஒன்றை உருவாக்கி வருகிறது மெட்டா. இன்ஸ்டாவை மையமாக வைத்தும் இயங்கும் இந்த புதிய தளத்தின் முன்னோட்டம் மெட்டா ஊழியர்களின் பார்வைக்கு கிடைத்துள்ளது. அதோடு ட்விட்டர் தளத்தில் பயனர்கள் குறித்து தனது எண்ணத்தையும் மார்க் ஸூகர்பெர்க் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், அவரை கேலி செய்து மஸ்க் ட்வீட் செய்திருந்தார். இதுதான் அவர்கள் இருவருக்கு இடையிலும் மோதல் போக்கை உருவாக்கி உள்ளது.
51 வயதான மஸ்க், கராத்தே, டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளில் சிறுவயதில் பயிற்சி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு தென்னாப்பிரிக்க வீதிகளில் அவர் சண்டையிட்டும் உள்ளாராம். மறுபக்கம் தற்காப்பு கலை வீரரான 39 வயது மார்க் ஸூகர்பெர்க், அண்மையில் ஜியு-ஜிட்சு போட்டியில் வெற்றி பெற்றிருந்தார். கடினமான மர்ப் சவாலை 40 நிமிடங்களில் முடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் - மார்க் ஸூகர்பெர்க் இடையிலான இந்தப் போட்டி நிச்சயம் பொழுதுபோக்கு நிறைந்த சண்டையாக இருக்கும். இதில் யார் வெற்றி பெற்றாலும் அது பார்வையாளர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். இது நடக்க வேண்டுமென்றால் இதிலிருந்து யாரும் பின்வாங்காமல் இருக்க வேண்டும்.
இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதினை நேருக்கு நேர் மோதலுக்கு மஸ்க் அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
I have this great move that I call “The Walrus”, where I just lie on top of my opponent & do nothing
— Elon Musk (@elonmusk) June 22, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT