Last Updated : 15 Oct, 2017 11:14 AM

 

Published : 15 Oct 2017 11:14 AM
Last Updated : 15 Oct 2017 11:14 AM

ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மயாதீன் நகரத்தை மீட்டது சிரியா

சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மயாதீன் நகரை, ராணுவம் மீட்டுள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டு கலவரம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியா அரசுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியாவின் பல நகரங்களை கைப்பற்றி தீவிரவாத தாக்குதல் நடத்தி பலரை கொன்று குவித்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் தெய்ர் எசார் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 3 கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் குர்திஷ் படையினர் உட்பட 50 பேர் பரிதாபமாக பலியாயினர். இதனால் பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அல் மயாதீன் என்ற நகரை ராணுவமும் நட்பு படைகளும் மீட்டுள்ளன. இத்தகவலை சிரியா அரசு ஊடகங்கள் நேற்று தெரிவித்தன. மயாதீன் நகரை மீட்க நடந்த சண்டையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகம் தெரிவித்தது. தொடர்ந்து தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மற்ற சில பகுதிகளையும் மீட்க ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x