Published : 06 Oct 2017 01:05 PM
Last Updated : 06 Oct 2017 01:05 PM
ஜப்பானைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் வழக்கத்தைவிட அதிக நேரம் வேலை பார்த்ததால் உயிரிழந்தது அவர் மறைந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு தெரியவந்துள்ளது.
ஜப்பனைச் சேர்ந்த மிவா சாடோ என்ற பெண் அங்குள்ள பொது செய்தி நிறுவனத்தில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் இதயம் செயலிழப்பு காரணமாக அவர் மரணமடைந்தார்.
ஆனால் அவரது இறப்புக்கான காரணம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தெரியவந்துள்ளது. அவரது மறைவுக்கு பணிச்சுமையே காரணம் என்ற தகவல் ஜப்பானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளராக பணிபுரிந்த காலகட்டத்தில், மிசா சாடோ ஒரு மாதத்தில் 159 மணி நேரம் கூடுதலாக வேலை பார்த்துள்ளார். இந்த கூடுதல் வேலை பளுவே மிசாவை மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைய செய்து அவரை மரணத்துக்கு தள்ளியுள்ளது. ஆனால், இது வெளிப்படையாக தெரிவிக்காமல் மறைக்கப்பட்டுள்ளது. அலுவலக அறிவுறுத்தலின் பேரில் உண்மையை மறைத்து வைத்திருந்த நிலையில் மிசாவின் பெற்றோர் இந்த உண்மையைத் தற்போது தெரிவித்துள்ளனர்.
மிசாவை போன்று மத்சுரி தகஷாசி (24) என்ற இளம்பெண்ணும் ஜப்பானில் கூடுதல் பணி நேரம் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.
ரோபோக்கள் போல நேரம் பார்க்காமல் உழைப்பவர்கள் ஜப்பானியர்கள் என்று பலரும் ஜப்பானியர்களை எடுத்துக்காட்டாக கூறுவது உண்டு, ஆனால் தற்போதைய நிலைமை கவலைக்குரியதாக உள்ளது.
எனவே பணியாளர்களின் பணி சுமையை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஜப்பான் அரசு இறங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT