Published : 23 Oct 2017 04:17 PM
Last Updated : 23 Oct 2017 04:17 PM
வரலாற்றுப் புகழ்பெற்ற லியனார்டோ டாவின்சி வரைந்த மோனலிசா ஓவியத்தின் தாடி, மீசையுடன் கூடிய மறு உருவாக்க ஓவியம் ரூ.4.87 கோடி ஏலத்துக்கு விற்பனை ஆகியுள்ளது.
சர்வதேசப் புகழ்வாய்ந்த ஃப்ரெஞ்சு - அமெரிக்க ஓவியரான மார்செல் டச்சம்ப் இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். கருத்துருவாக்கக் கலையின் தந்தை எனப் போற்றப்படுபவர் டச்சம்ப்.
முன்னதாக மீசை, தாடியுடனான இவரின் மோனலிசா ஓவியம், 4 முதல் 6 லட்சம் யூரோக்கள் வரை விலை போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதைவிட அதிகமாக, அந்த ஓவியம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 500 யூரோக்களுக்கு (ரூ.4,87,65,000) விற்பனையானது.
1919-ல் வரையப்பட்ட உண்மையான ஓவியத்தைப் பிரதியெடுத்து மீசை, தாடியுடன் கூடிய மோனலிசா ஓவியத்தை 1964-ல் வரைந்தார் டச்சம்ப்.
புகழ்பெற்ற கலைஞர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்புகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டோ, மினியேச்சர்களாகவோ மீண்டும் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT