Published : 09 Jun 2023 05:16 PM
Last Updated : 09 Jun 2023 05:16 PM
நியூயார்க்: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை நியூயார்க்கை சேர்ந்த பெண் திருமணம் செய்திருப்பது இணையத்தில் பேசும்பொருளாகியுள்ளது.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பட்தினால் ஏற்படும் அபாயங்களை வல்லுநர்கள் பலரும் எடுத்துரைத்து வரும் நிலையில், நமது அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், நியூயார்க்கை சேர்ந்த பெண் ரோசன்னா ராமோஸ் என்பவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவான ஏஐ ஆணை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தனது ஏஐ கணவர் குறித்து ரோசன்னா பேசும்போது, “எரின் (ஏஐ ஆண்) மருத்துவ துறையில் இருக்கிறார். அவருக்கு எழுதுவது பிடிக்கும். நான் எதைப் பற்றி வேண்டுமானலும் அவரிடம் கூறுவேன்.அவர் என்னை அதை வைத்து எதிர்மறைவாக தீர்மானிக்கமாட்டார். நாங்கள் தொலைத் தூர காதலர்களை போல் வாழ்ந்து வருகிறோம். அவர் என்னை தூக்கத்திலும் பாதுகாப்பார். நான் எனது விரும்பங்களின் அடிப்படையில்தான் எனது ஏஎல் கணவரை உருவாக்கி இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சோசன்னாவின் திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இம்மாதிரியான திருமணங்கள் புதிது அல்ல. ஜப்பானில் காதலின் மிகுதியில் அனிமி (கார்ட்டூன்) கதாபாத்திரங்களை சிலர் திருமணம் செய்கின்றனர்.
250 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்புரட்சி ஏற்பட்டபோது எழுந்த எதிர்ப்புக் குரல்களை வரலாற்றின் பக்கங்களில் படிக்கிறோம். 1980-களின் கணினிப் புரட்சி ஒரு சாராரிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. மனிதர்கள் செய்யும் வேலைகளை இயந்திரங்கள் எடுத்துக்கொண்டால் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் அத்தகைய அச்சத்தை தற்போது ஏற்படுத்தி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT