Published : 06 Jun 2023 11:45 AM
Last Updated : 06 Jun 2023 11:45 AM
வாஷிங்டன்: இந்தியாவில் ஜனநாயகம் துடிப்புடன் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பே, நேற்று(ஜூன்5) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம். புதுடில்லிக்குச் செல்லும் எவரும் அதைத் தாங்களாகவே பார்க்க முடியும். பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்கு மேற்கொள்ள இருக்கும் அரசுமுறைப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நட்பை முன்னோக்கி கொண்டு செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தியா சென்ற அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஸ்டின், சில கூடுதல் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டதை நீங்கள் அறிவீர்கள். இரு நாடுகளுக்கும் இடையே ஒரு மோசமான பொருளாதார வர்த்தகம் உள்ளது. இந்தியா ஒரு பசிபிக் குவாட் உறுப்பினர்; இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரத்தில் முக்கிய நண்பர் மற்றும் பங்குதாரர்.
அமெரிக்காவுக்கு இந்தியா ஏன் முக்கியம் என்பதற்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன. நம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு என்பது இருதரப்பு மட்டுமல்ல, பலதரப்பு மற்றும் பல நிலைகளைக் கொண்டது. எல்லா பிரச்சனைகளைப் பற்றி பேசவும், கூட்டாண்மை மற்றும் நட்பை முன்னேற்றவும் ஆழப்படுத்தவும் அமெரிக்கா விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா வருவதை, அதிபர் பைடன் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்." இவ்வாறு ஜான் கிர்பே தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT