Published : 02 Jun 2023 02:22 PM
Last Updated : 02 Jun 2023 02:22 PM
இஸ்லமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நுகர்வோர் விலை குறியீட்டு பட்டியல் 38 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் காரணமாக அந்த நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த ஏப்ரலில் அந்த நாட்டின் பணவீக்கம் 36.4 சதவீதமாக இருந்தது. இந்தச் சூழலில் ஒரே மாதத்தில் 1.6 சதவீதம் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதன் காரணமாக கடந்த மே, 2022 உடன் மே, 2023 ஒப்பிடும்போது நுகர்வோர் பொருட்கள் மீதான விலை ஊரக பகுதியில் 52.4 சதவீதம் என்ற அளவிலும், நகர பகுதிகளில் 48.1 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. நடப்பு ஜூனில் இது குறையலாம் என எதிர்பார்ப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பணவீக்க சதவீதம் இலங்கையுடன் அதிகமாகும். கடந்த மே மாதத்தில் இலங்கையில் இந்த எண்ணிக்கை 25.2 சதவீதமாக இருந்தது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை கடந்த மாதம் 4.7 சதவீதமாக இருந்துள்ளது.
சர்வதேச செலாவணி நிதியத்துக்குத் தேவையான வகையில் மேற்கொள்ளப்பட்ட நிதி மாற்றங்களின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தியதில் இருந்து பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT