Published : 01 May 2022 08:01 AM
Last Updated : 01 May 2022 08:01 AM
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பகுதி.- 8 -
இந்திய அரசியலமைப்பை கேள்விகளின் அடிப்படையில் 5 பிரிவுகளாக பிரித்துப் பார்க்கலாம்.
முதல் பிரிவு
முதல் பிரிவு - இந்திய அரசியலமைப்பு வரலாறு / உருவாக்கம் பகுதி I, II, III, IV IVஅ இந்திய அரசியலமைப்பு வரலாறு / உருவாக்கம் - முகப்புரை, 395 விதிகள் (Articles) 22 பகுதிகள் (Parts) 12 அட்டவணைகள்/ இணைப்புபட்டியல்கள் (12 Schedules) உள்ளன.
பகுதி I, II, III, IV IVஅ
பகுதி I - ஒன்றியமும், அதன் ஆட்சி நிலவரையும் (Part I - Union and its Territory) – (28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள், தமிழ்நாடு பெயர் மாற்றம் (1969), ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் (2019)
பகுதி II - குடிமை & குடியுரிமை சட்டம் 1955 (Part II - Citizenship and Citizenship Act 1955)
பகுதி III - அடிப்படை உரிமைகள் (6 வகை ) (Part III - Fundamental Rights) (6 types)
1. சமன்மைகளுக்கான உரிமைகள் (விதி 14-18) (Right to Equality)
2. சுதந்திரத்துக்கான உரிமை (விதி 19-22) (Right to Freedom)
3. சுரண்டலைத் தடுப்பதற்கான உரிமை (விதி 23, 24) (Right Against Exploitation)
4. மத சுதந்திரத்துக்கான உரிமை (விதி 25-28) (Right to Freedom of Religion)
5. பண்பாடு, கல்வி பற்றிய உரிமை (விதி 29, 30) (Cultural and Educational Rights)
6. அரசமைப்பு தீர்வுகளுக்கான உரிமை (விதி 32) (Right to Constitutional Remedies)
பகுதி IV - அரசு கொள்கையை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் (Part IV - DPSP) (விதி 39அ, 43அ, 48அ, 40)
பகுதி IVஅ - அடிப்படை கடமைகள் (11 கடமைகள்) (Fundamental Duties)
இதோடு, அரசியல் சாசனத்தில் உள்ள அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகளும் (Constitutional Authorities) இதில் அடங்கும். யுபிஎஸ்சி/ டிஎன்பிஎஸ்சி (UPSC/TNPSC), இந்திய கணக்காய்வாளர் (CAG), இந்திய தலைமை வழக்
கறிஞர், தேர்தல் ஆணையம், நிதி ஆணையம் போன்ற அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் பற்றிய கேள்விகள் இதில் இடம்பெறும். இவை ஐந்தும் சார்ந்தது முதல் பகுதியாகும்.
2-வது பிரிவு - நாடாளுமன்றம், சட்டமன்றம் (Union & State Legislature)
நாடாளுமன்ற மேலவை - கீழவை, அதன் உறுப்பினர்கள் (MP), சட்டம் இயற்றும் அதிகாரங்கள் - விதி 110, 112, 123. இவை தவிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய தகுதிகள். இதனுடன் சேர்த்து நாடாளுமன்ற குழுக்கள் குறிப்பிடத்தக்கவை. பொதுக் கணக்கு குழு (Public Accounts Committee), மதிப்பீட்டுக் குழு (Estimates Committee) பற்றிய கேள்விகள். அதேபோல சட்டப்பேரவையின் மேலவை - கீழவை, அதன் உறுப்பினர்கள் (MLC/ MLA), சட்டம் இயற்றும் அதிகாரங்கள்.
7-ம் அட்டவணையில் (7th Schedule) குறிப்பிட்டவாறு அமைந்துள்ள ஒன்றிய பட்டியல் (100 Items) - Union List, மாநில பட்டியல் (61 items) - State list, ஒருங்கிணைந்த பட்டியல் (52 items) - Concurrent List. இவை பற்றிய கேள்விகள். 3-வது பிரிவு - ஆட்சித் துறை ஒன்றிய ஆட்சித் துறை என்பது இந்திய குடியரசுத் தலைவர் (President of India), குடியரசு துணைத் தலைவர், அமைச்சரவைக் குழு, பிரதமர் (Council of Ministers & Prime Minister), இந்திய தலைமை வழக்கறிஞர் (Attorney General of India) ஆகியவை சார்ந்தது. இதேபோல, மாநிலங்கள் என்று வரும்போது ஆட்சித் துறை என்பது ஆளுநர், முதல்வர், அமைச்சரவை, மாநில தலைமை வழக்கறிஞர் (Advocate General of State) சார்ந்தது ஆகும்.
4-வது பிரிவு - நீதித் துறை
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மாவட்ட, கீழமை நீதிமன்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது நீதித்துறை (Judiciary). இதில் அடிப்படை உரிமை சார்ந்த விதி 32, 226 உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தொடர்பான கேள்விகள் இடம்பெறும்.
5-வது பிரிவு - உள்ளாட்சி
இந்திய அரசியலமைப்பு 22 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பகுதி I, II, III, IV IVஅ மற்றும் பகுதி IX ஆகியவை முக்கியமான பகுதிகள் ஆகும். இது ஊராட்சியை (Local Government) பற்றியது.
ஊராட்சி பற்றிய விதி 40-ல் இருந்தாலும், ஊராட்சிக்கு அரசியலமைப்பு அந்தஸ்து கொடுத்தது 73-வது சட்டத் திருத்தம்தான். இதன்மூலம் 11-வது அட்டவணை சேர்க்கப்பட்டு, பகுதி IX (Part IX), 243 A - கிராம சபை 243 D இடஒதுக்கீடு (Reservation), 74-வது சட்ட திருத்தம் மூலம் 12-வது அட்டவணை சேர்க்கப்பட்டு பகுதி IX ஆ [Part IX A], 243 ZD மாவட்ட திட்டக் குழு [District Planning Committee], 243 ZE பெரு நகர திட்டக் குழு [Metropolitan Planning Committee] சேர்க்கப்பட்டது. இது தொடர்பான கேள்விகளை உள்ளடக்கியது இப்பகுதி.
இவற்றையெல்லாம் ஒருசேர பார்த்தால், இந்திய அரசியலமைப்பு பாடத்தில் முதல் பிரிவு - இந்திய அரசியலமைப்பு வரலாறு/ உருவாக்கம் முகப்புரை, பகுதி I, II, III, IV IVஅ, குறிப்பிட்ட அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், 2-வது பிரிவு நாடாளுமன்றம், சட்டப்பேரவை, 3-வது பிரிவு ஆட்சித் துறை, 4-வது பிரிவு நீதித்துறை, 5-வது பிரிவு உள்ளாட்சி என 5 பிரிவுகளாக பிரித்து கேள்விகள் கேட்கப்படும். இவ்வாறே பிரித்துக் கொண்டு தயாரிப்பு பணியை மேற்
கொள்வது சிறப்பு.
(அடுத்த பகுதி.. சனிக்கிழமை வரும்)
முந்தைய பகுதி: போட்டித்தேர்வு தொடர் 07: காரணத்தோடு தேடு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT