Published : 14 Feb 2023 06:02 AM
Last Updated : 14 Feb 2023 06:02 AM
இணையத்தில் காணொளிகளைப் பதிவேற்றக் கூடிய, பார்க்கக் கூடிய வசதிகளைத் தரும் பல இணையதளங்கள் இன்று இருக்கின்றன.
காணொளி பதிவேற்ற இணையதளங்களில் மிகப் பிரபலமான முன்னோடியான யூடியூப் 2005 பிப்ரவரி 14-ல் தொடங்கப்பட்டது. யூடியூப் தளத்தின் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ளது.
சாட் ஹர்லி பென்சில்வேனியாவில் உள்ள இன்டியானா பல்கலைக்கழகத்தில் வடிவமைப்பு பட்டப்படிப்பு படித்தவர். ஸ்டீவ் சென் மற்றும் ஜாவேத் கரீம் இருவரும் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்தவர்கள்.
முதன்முதலில் கலிபோர்னியா நகரில் ஒரு சிறிய ஜப்பானிய உணவகத்தின் மேல் மாடியில்தான் யூடியூப் நிறுவனத்தை மூவரும் இணைந்து தொடங்கினர்.
2006-ல் கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு அதன் துணை நிறுவனங்களில் ஒன்றாக இயங்கிவருகிறது யூடியூப். காணொளிகளைப் பதிவேற்றுதல், பகிர்தல், பார்த்தல், கருத்துகளைத் தெரிவித்தல், விருப்பம் / விருப்பமின்மைக் குறியிடுதல், மதிப்பிடுதல் ஆகிய வசதிகளை யூடியூப் தருகிறது.
இன்று உலகின் பல்வேறு ஊடக நிறுவனங்கள் தங்கள் காணொளி வடிவச் செய்திகளை யூடியூபில் வெளியிடுகின்றன. ஒவ்வொரு நாளும் சராசரியாக 13 கோடிப் பேர் யூடியூப் தளத்தைப் பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT