Published : 20 Jan 2023 06:02 AM
Last Updated : 20 Jan 2023 06:02 AM
இந்திய விடுதலை போராட்ட வீரர், அரசியல் அமைப்பை உருவாக்க உதவியவர் தேஜ் பகதூர் சப்ரு. இவர் உத்தரபிரதேசம் அலிகார் நகரில் 1875 டிசம்பர் 8-ம் தேதி பிறந்தார். ஆக்ரா கல்லூரியல் பயின்றார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் வேந்தராக பணிபுரிந்தார். இந்தியாவின் லிபரல் கட்சியின் தலைவராக இருந்தார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மகாத்மா காந்தி சத்தியாகிரகத்தை தொடங்கியபோது இவர் இந்திய காங்கிரஸுடன் இணைந்து போராடினார். 1927-ல் இந்திய அரசியலமைப்பை உருவாக்க இவர் அனைத்து கட்சி மாநாட்டை ஏற்பாடு செய்தார். அதன் தொடர்ச்சியாக 1928-ல் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து ஜவஹர்லால் நேரு குழு அறிக்கையை உருவாக்க உதவினார்.
அவரது பரிந்துரை இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக, கூட்டாட்சி அரசியலின் ஒரு பகுதியாக மாநிலங்களை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒன்றிணைக்க முன்மொழிந்தார். இந்தியா சுதந்திரம் பெற்று 15 மாதங்களுக்கு பிறகு 1949 ஜனவரி 20-ல் காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT