Published : 13 Jan 2023 06:01 AM
Last Updated : 13 Jan 2023 06:01 AM
இந்தியாவில் இருந்து விண்ணுக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா. இவர் 1949 ஜனவரி 13-ம் தேதி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பிறந்தார். ஐதராபாத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் படிப்பை முடித்தார். 1966-ல்தேசிய ராணுவப் பள்ளியில் விமானப் படை பிரிவில் சேர்ந்தார். ராகேஷ் அடிப்படையில் இந்திய விமானப்படை வீரர்.
1970-ல் இந்திய விமானப்படையில் விமானியாக பணியில் சேர்ந்தார். கடந்த 1982-ல்சோவியத் இந்தியன் விண்கலத்தில் செல்லும் விண்வெளி வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
இவர் 2 ரஷ்ய விண்வெளி வீரர்கள் சோயுஸ் டி-11 என்ற விண்கலம் மூலம் 1984 ஏப்ரல் 3-ல் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். மொத்தம் 8 நாட்கள் மேற்கொண்ட பயணத்தின் முடிவில் தனது குழுவுடன் ஏப்ரல் 11-ல் கஜகஸ்தானில் தரையிறங்கினார். பிறகு சல்யூட் 7 என்ற விண்வெளி மையத்தில் தங்கி குழுவுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இவரின் பணிகளை பாராட்டி அசோகா சக்ரா விருது, சோவியத் ரஷ்யாவின் நாயகன், ஆர்டர் ஆப் தி லெனின் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. இத்தகைய பெருமைக்குரிய ராகேஷ் சர்மாவின் 74-வது பிறந்தநாள் இன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT