Published : 10 Jan 2023 06:00 AM
Last Updated : 10 Jan 2023 06:00 AM
கவிஞர், கல்வியாளர், பெண்ணியவாதி கேப்ரியல்லா மிஸ்ட்ரல். இவர் 1945-ல் தமது கவிதை வரிகளுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர். 1889 ஏப்ரல் 7-ம் தேதி விக்குனா சிலியில் பிறந்தார் கேப்ரியல்லா மிஸ்ட்ரல்.
தன்னுடைய 15 வயதில் உள்ளுர் நாளிதழில் இவர் கவிதைகள் பிரசுரமான அதேவேளையில் ஆசிரியராக பணிபுரிய தொடங்கினார். 1909-ல் டி ல முர்டே (de la Muerte) என்ற கவிதைக்காக தேசிய விருது பெற்றார். பிறகு கல்லூரி பேராசிரியராக பெர்னார்ட் கல்லூரி கொலம்பியா பல்கலையில் பணிபுரிந்தார்.
இவரது பாடல்களின் மையக்கருத்தாக இயற்கை, ஏமாற்றம், காதல், அன்னையின் அன்பு, சோகமும் மீட்பும், பயணம் மற்றும் ஐரோப்பிய பண்பாட்டுக் கூறுகளாலான லத்தீன் அமெரிக்க அடையாளம் ஆகியவற்றை சார்ந்திருந்தது.
1923-ல்தேசத்தின் ஆசிரியர் என்ற பட்டம் பெற்றார். இவரின் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் ஸ்பானிஷ் மொழி செய்தித்தாள்களிலும், இதழ்களிலும் வெளிவந்தது. 1951-ல் சிலியின் தேசிய விருது பெற்றார். சிலி நாட்டின் 5,000 பெசொ எனும் ரூபாய் நோட்டில் இவரது உருவப்படம் அச்சிடப்பட்டுள்ளது. இவர் 1957 ஜனவரி 10-ல் காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT