Published : 05 Jan 2023 06:00 AM
Last Updated : 05 Jan 2023 06:00 AM
நாடு வளமிக்க நாடாக இருக்க, நாட்டின் வனப்பகுதி வளம் மிக்கதாக இருக்க வேண்டும். பறவையியல் ஆய்வாளர்களில் முன்னோடி, இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படும் சலீம் அலி. தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் இவர் ஈடுபட்டார்.
இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான அரிய வகை பறவை இனங்கள் உள்ளன. தமிழகத்தில் கூழைக்கிடா, வண்ண நாரை, கரண்டிவாயன், புள்ளிமூக்கு வாத்து, செந்நீல நாரை, பாம்புதாரா, நீர்காகம் உள்ளிட்ட பலவகைப்பட்ட பறவை இனங்கள் வாழ்கின்றன. தமிழகத்தில் உள்ள சதுப்புநில காடுகள், மலைகள் போன்ற இயற்கை நிறைந்த இடங்களில் பல வகையான பறவைகள் கூடு கட்டி வாழ்கின்றன.
பறவைகள் தங்களின் இனப்பெருக்கத்திற்காக வலசை போகும். இப்படி வலசை போகின்ற பறவை இனங்கள் குறைந்து வருகிறது. அரிய வகை பறவை இனங்கள் இயற்கை சீற்றம், காடுகளை அழித்தல், இறைச்சிக்காக பறவைகளை வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் அழிக்கப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் உள்ள பூச்சிகளை உண்டு வாழும் பறவைகள் உண்டு. விவசாயிகளோ பூச்சிகளை தடுக்க பூச்சி மருந்துகள் தெளிப்பதனால் பறவைகள் உணவு தேட சிரமப்படுகின்றன. பறவைகள் இனம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக ஆண்டுதோறும் பறவைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT