Published : 04 Jan 2023 06:02 AM
Last Updated : 04 Jan 2023 06:02 AM
தடித்த புள்ளிகளை விரலால் தொடுவதன் மூலம் பாடங்களை கற்க பிரெய்லி எழுத்துக்கள் உதவுகிறது. இதை கண்டுபிடித்தவர் லூயிஸ் பிரெய்லி. இவர் 1809 ஜனவரி 4-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் பிறந்தார்.
குழந்தை பருவத்தில் தையல் ஊசியை வைத்து விளையாடும் போது எதிர்பாராத விதமாக பிரெய்லி கண்ணில் காயம் ஏற்பட்டது. இதற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கத் தவறியதால் பரிவுக்கண் நோயால் (sympathetic ophthalmia) தனது இரு கண்களிலும் பார்வை இழந்தார். பார்வையற்றோருக்கான பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டபோதும் மாற்றுத்திறனாளிகள் எழுதப் படிக்க சிறப்பான முறைகள் இல்லை என்பதை நினைத்து வருந்தினார்.
ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ரகசியக் குறியீடான கிரிப்டோகிராஃபி குறித்து அறிந்த பிரெய்லி அதுபோலவே உலகின் முதல் பார்வையற்றோர் எழுத்துக்களை உருவாக்கினார். 15 வயதை எட்டியபோதே பார்வையற்றோருக்கான பொது மொழியை கண்டுபிடித்தார். பிறகு 20 வயதில் அவர் வெளியிட்ட பிரெய்லி புத்தகம் பார்வையற்றோருக்கான கல்வி முறையானது.
இதற்காக உலக நாடுகள் அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயங்கள் வெளியிட்டு பெருமைப்படுத்தின. இவரது நினைவாக இந்திய அரசும் இவரது படம் பொறித்த 2 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT