Published : 16 Sep 2022 06:00 AM
Last Updated : 16 Sep 2022 06:00 AM
பூமிக்கு கேடயம் ஓசோன் படலம்தான். பூமியின் மேற்பரப்பில் சூழ்ந்திருக்கும் ஓசோன் படலத்தை பாதுகாத்தால் மட்டுமே அனைத்து உயிரினங்களும் வாழக்கூடிய இடமாக பூமியை பாதுகாத்திட முடியும்.
அதற்கு மாசுப்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். இது முதன்முதலில் கண்டறியப்பட்டது 1974-ல்தான். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆயவறிஞர்கள் பிராங் ஷெர்வுட் ரவ்லாந்து, மரியோ மோலினா வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்ததையும் அதனால் புற ஊதா கதிர்கள் மனித இனத்தை நேரடியாகத் தாக்கும் என்பதையும் கண்டறிந்தனர்.
அதன் பின்னர் 1987-ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் உலக ஓசோன் தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 16-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT