Published : 06 Sep 2022 06:00 AM
Last Updated : 06 Sep 2022 06:00 AM

செப்.06: இன்று என்ன? - ஜான் டால்ட்டன் பிறந்த தினம்

அணு கோட்பாட்டை கண்டறிந்த விஞ்ஞானி ஜான் டால்ட்டன் பிறந்த தினம் இன்று. இங்கிலாந்து நாட்டில் ஈகிள்ஸ்பீல்டு நகரில் 6.9.1766 அன்று பிறந்தார். புகழ்பெற்ற வேதியியலாளர், இயற்பியலாளர் மற்றும் வானிலை அறிஞர் ஆவார்.

அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்டவர் அவர்தான். நிறக்குருடு ஆராய்ச்சி, வாயு விதிகள், வளிமண்டல சுழற்சியின் ஹாட்லி செல் கோட்பாடு போன்றவை அவரது பங்களிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

அணுக்கரு கோட்பாடு டால்ட்டனின் கண்டுபிடிப்புகளில் முதன்மையானதாக கருதப்படுகிறது. இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் 27.7.1844 அன்று 77-வது வயதில் காலமானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x