Published : 25 Aug 2022 06:01 AM
Last Updated : 25 Aug 2022 06:01 AM

ஆக.25: இன்று என்ன? - ஜேம்ஸ் வாட் நினைவு தினம்

நீராவி என்ஜினை கண்டு பிடித்தவர் ஜேம்ஸ் வாட். ஐரோப்பாவின் தொழிற்புரட்சிக்கு வித்திட்டவர். ஹார்ஸ் பவர் எனப்படும் குதிரைத்திறன் அளவுமுறையை தந்தவர். மின்சாரம் கணக்கிடும் அளவுமுறைக்கு வாட் என இவர் பெயரே சூட்டப்பட்டது.

ஆனால் அவர் நீராவி என்ஜினை ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கவில்லை. இயந்திரத்தை பழுது பார்க்கும் வேலை ஜேம்ஸ் வாட்டுக்கு கிடைத்தது. சிறுவயது முதலே உடலில் வலுவற்றவர் என்பதால் இயந்திரத்தை புஜபலம் கொண்டு அவரால் கையாள முடியவில்லை.

அதற்கான மாற்றை யோசித்தபோது சக்கரமும், பிஸ்டனை மேலும் கீழும் இயக்கும் ரோட்டரி முறையையும், நீராவியைக் கட்டுப்படுத்தும் த்ராட்டில் வால்வையும், கடைசியில் நீராவி என்ஜினையும் கண்டுபிடித்தார். 1819-ல் ஆக., 25 அன்று ஜேம்ஸ் வாட் காலமானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x