Published : 08 Aug 2022 06:00 AM
Last Updated : 08 Aug 2022 06:00 AM
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 8-ம் தேதி சர்வதேச பூனைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மனித இனத்தின் பழங்கால செல்லப் பிராணிகளில் ஒன்று பூனை.
எகிப்து நாட்டில் ஆதிகாலத்தில் பூனைகளை வழிபடும் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு எலிகள், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான விலங்காகப் பூனைகளை கிரேக்கர்களும் ரோமானியர்களும் வளர்க்கத் தொடங்கினர்.
ஆனால், மத்திய காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பூனைகள் கெட்ட சகுனமாகக் கருதப்படும் மூடநம்பிக்கை பரவியது. இதனால் 1600-கள் வரை ஆயிரக்கணக்கான பூனைகள் உலகெங்கிலும் கொல்லப்பட்டன.
இந்நிலையில், பூனை இனத்தைப் பாதுகாக்கும் இலக்குடன் சர்வதேச விலங்குகள் நல நிதியத்தால் கடந்த 2002-ம் ஆண்டு சர்வதேச பூனைகள் தினம் அறிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT