Published : 19 Jul 2022 06:00 AM
Last Updated : 19 Jul 2022 06:00 AM
பர்மாவின் (தற்போதைய மியான்மர்) புரட்சியாளர் ஜெனரல் ஆங் சான். பர்மாவின் நவீன ராணுவத்தை கட்டமைத்தவர். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பர்மா விடுதலை அடைய பாடுபட்டவர்களில் முதன்மையானவர்.
பர்மிய மக்களால் ஜெனரல் என்ற பொருள்படும், ‘போகியோக்’ என்ற சொல்லால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்டார். பர்மா 1937-ல் தனி நாடாகப் பிரிந்ததை அடுத்து ‘நமது பர்மா கூட்டமைப்பு’ என்ற அமைப்பின் பொது செயலாளராக 1939 பதவியேற்றார்.
1947 ஜூலை 19-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். பர்மாவின் விடுதலையை காணாமலேயே மறைந்தார். மியான்மரில் மக்களாட்சி ஏற்படுத்த அறவழி போராட்டம் நடத்தியதற்காக 22 ஆண்டுகாலம் வீட்டுச்சிறை அனுபவித்த ஆங் சான் சூக்கி இவரது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT