Published : 18 Jul 2022 06:00 AM
Last Updated : 18 Jul 2022 06:00 AM

ஜூலை 18: இன்று என்ன? - சென்னை மாகாணம் தமிழ்நாடு ஆனது

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று 1955-ல் பெரியார் குரல் கொடுத்தார். 1956 நவம்பர் 1-ல் மாகாண அமைப்பு முறையானது பல மாநிலங்களாக மாற்றி அமைக்கப்பட்டது.

இருப்பினும் சென்னை மாகாணம் - மதராஸ் மாகாணம் - மெட்ராஸ் மாகாணம் ஆகிய பெயர்களே நீடித்தன. 1956 அக்டோபரில் தியாகி சங்கரலிங்கனார் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் இருந்து உயிர் நீத்தார். 1961-ல் எம்பி பூபேஷ் குப்தா மாநிலங்களவையில், தமிழ்நாடு என்று அழைக்க தனி நபர் மசோதா தாக்கல் செய்தார்.

1967-ல்அண்ணா தமிழக முதல்வரானதும் அதே ஆண்டு ஜூலை 18-ல் தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கான தனி மசோதா நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஜூலை 18 தமிழ்நாடு நாளானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x