Published : 08 Jul 2022 08:31 AM
Last Updated : 08 Jul 2022 08:31 AM

ஜூலை 8: இன்று என்ன? - இந்தியாவை நோக்கி வாஸ்கோடகாமாவின் பயணம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர்களுக்கு இந்தியா என்பது பெரிய இலக்கு. இந்தியாவின் வளமும் செல்வச்செழிப்புமே அதற்கு முக்கியக் காரணம். இந்தியாவுக்கான புதிய கடல்வழியை கண்டுபிடித்த போர்ச்சுக்சீயர் வாஸ்கோடகாமா.

1497-ல் ஜூலை 8 அன்று பயணம் தொடங்கியவர் 1498 மே 20-ம் தேதி கேரளத்தின் கோழிக்கோட்டை அடைந்தார். கோழிக்கோடு மன்னர் சாமரின் வாஸ்கோடகாமாவை வரவேற்றார்.

இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்கிய வாஸ்கோடகாமா திரும்பிச் செல்லும்போது விலை உயர்ந்த பொருட்களை கொண்டு சென்றார்.

அதன் பிறகு இரண்டாம் முறையாக 1501-ல் இந்தியா வந்தார். இரண்டாவது முறை கேரளம் கண்ணூரில் போர்ச்சுக்கீசிய வணிகத் தலம் ஒன்றை நிறுவினார். இந்தியாவில் காலனியாதிக்கத்துக்கு முதல் அடியெடுத்து வைக்கப்பட்டது அப்படித்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x