Published : 06 Jul 2022 07:22 AM
Last Updated : 06 Jul 2022 07:22 AM

ஜூலை 6: இன்று என்ன? - துணிவால் இந்தியாவின் துணை பிரதமரானவர்

பிஹார் மாநிலத்தில் போஜ்பூர் மாவட்டம் சந்தவா கிராமத்தில் சாமர் எனும் பட்டியலின சமூகத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜகஜீவன் ராம்.

தனது 23 வயதில் காங்கிரஸில் இணைந்து காந்தியடிகளின் சத்தியாகிரகத்தை முழுவதுமாகப் பின்பற்றத் தொடங்கினார். 1946-ல் நேரு அமைச்சரவையின் இளம் அமைச்சரானார். 1971-ல் பாகிஸ்தானிடமிருந்து வங்காளதேசத்தை தனி நாடாகப் பெற்றுத் தந்ததில் முதன்மை பங்கு வகித்தவர்.

1979-ல் இந்தியாவின் துணைப் பிரதமர் நிலைக்கு உயர்ந்தார். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி, ஆற்றல் மிக்க நிர்வாகி, பிரம்மிப்பூட்டும் மத்திய அமைச்சர், தீவிர பாட்டாளி மற்றும் தலித் போராளி இப்படி இந்திய அரசியலில் பல அவதாரங்கள் எடுத்த ஜகஜீவன் ராம் 1986-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x