Published : 25 Feb 2020 09:45 AM
Last Updated : 25 Feb 2020 09:45 AM
இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது ஒவ்வொரு மாகாணங்களில் இருந்தும் பல தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பல தலைவர்களின் செயல்பாடுகள் கவனத்துக்குரியவை. அந்தவகையில் முக்கியமான தலைவர் வேதரத்தினம் பிள்ளை. இவர் 1897 பிப்ரவரி 25 அன்று வேதாரண்யத்தில் பிறந்தார்.
இவர் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராவார். இந்திய விடுதலை இயக்கத்திலும் செயல்பட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக 14 ஆண்டுகள் பதவிவகித்துள்ளார். ஆங்கிலேய அரசின் உத்தரவை மீறி 1930 -ல் ராஜாஜியின் தலைமையில் நடந்த வேதாரண்ய உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பெரியளவில் உதவி செய்துள்ளார். இவரது நினைவாக 1998 பிப்ரவரி 25-ல் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT