Published : 14 Feb 2020 07:54 AM
Last Updated : 14 Feb 2020 07:54 AM
உலகின் முக்கியமான இயற்பியலாளர்களில் ஒருவர் சார்லஸ் தாம்சன் ரீஸ் வில்சன். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த வில்சன் இயற்பியல் துறையில் மட்டுமல்லாமல் வானியல் துறையிலும் சிறந்து விளங்கினார்.
அடிப்படையில் இவர் வேளாண் குடும்பத்தை பின்னணியாக கொண்டவர். இவரது தந்தையின் இறப்புக்கு பின் குடும்பத்துடன் மான்செஸ்டருக்கு புலம்பெயர்ந்து விட்டார்.
லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றார். பின்னர் வானியல் துறை மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்ட பிறகு 1893-ம் ஆண்டு முதல் வானியலை படிக்கத் தொடங்கினார்.
இதன் தொடர்ச்சியாக ‘மேக அறை’ (cloud chamber) என்பதை கண்டறிந்தார். இதற்காக 1927-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1869 பிப்ரவரி 14-ல் கிளென்கோர்ஸ் என்ற நகரத்தில் பிறந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT