Published : 21 Jan 2020 08:10 AM
Last Updated : 21 Jan 2020 08:10 AM
20-ம் நூற்றாண்டின் புரட்சிகர அரசியல் தலைவராக விளங்கியவர் விளாதிமிர் லெனின். இவர் 1870 ஏப்ரல் 20-ம் தேதி ரஷ்யாவின் சிம்பிர்ஸ்க் நகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். கார்ல் மார்க்ஸின் வழித்தோன்றலான லெனின், ரஷ்யாவில் பொதுவுடமை கட்சி வலுபெறுவதற்கு காரணமாக இருந்தார். போல்செவிக் கட்சியின் தலைவரான லெனின், ஒரு புரட்சிகர சமூகமயமாக்களை உருவாக்க அயராது பாடுபட்டார்.
முதலாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த வேளையில் 1917-ல் 2 புரட்சிகள் நடந்தன. இதில் அக்டோபர் புரட்சி சாதகமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபராக பதவியேற்றார் லெனின். மாபெரும் அரசியல் கோட்பாட்டாளரான லெனின், 1924 வரை தலைமை வகித்தார். பின் 1924 ஜனவரி 21-ல் மாஸ்கோவில் இறந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT