Published : 28 Nov 2019 07:34 AM
Last Updated : 28 Nov 2019 07:34 AM
இந்திய சமூக சீர்திருத்தவாதிகளில் முக்கியமானவர் ஜோதிபா பூலே. இவர் 1827 ஏப்ரல் 11-ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் கட்கன் எனும் கிராமத்தில் பிறந்தார்.
தனது வாழ்நாள் முழுவதும் தீண்டாமை, சாதிய முறைக்கு எதிராகவும், பெண் விடுதலைக்காகவும் போராடினார்.
சமூகத்தில் அனைவரும் சமம். இதில் எவ்வித ஏற்றத்தாழ்வும் இல்லை எனும் நோக்கில் 1873 செப்டம்பர் 24-ம் தேதி சத்யசோதாக் சமாஜை நிறுவினார். இவரும், இவரது மனைவி சாவித்திரி பாயும் இணைந்து 1848-ம் ஆண்டு பிதோவாடாவில் பெண் குழந்தைகளுக்கான முதல் பள்ளியை தொடங்கினார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT