Published : 23 Oct 2019 08:48 AM
Last Updated : 23 Oct 2019 08:48 AM

இன்று என்ன?- எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐ.நா. வில் இசைக் கச்சேரி நிகழ்த்திய நாள்

உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதுரையைச் சேர்ந்தவர். தனது ஆற்றல் மிக்க சங்கீதத்தின் மூலம் எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தவர். கடந்த 1966-ம் ஆண்டு அக்டோபர்- 23ம் தேதி ஐ.நா. சபையில் இசைக் கச்சேரியை நிகழ்த்தினார்.

அப்போது ஐ.நா.வின் பொதுச் செயலாளராக இருந்த யூ.தாண்ட் அழைப்பின் பேரில் சென்றார். அந்த நிகழ்வு இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது.

கடந்த 1998-ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x