Published : 22 Oct 2019 09:06 AM
Last Updated : 22 Oct 2019 09:06 AM

இன்று என்ன நாள்?- அப்பல்லோ-7  விண்கலம் திரும்பிய தினம்

இன்றுவரை மனிதகுலத்தின் சாதனையாக பார்க்கப்படுவது நிலவில் மனிதன் இறங்கியது தான். அதற்கு முதல் முயற்சியாக அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனையை நடத்தியது. நாசா திட்டத்தின் படி 1968-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி அப்பல்லோ-7 என்ற விண்கலத்தில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பினர்.

அந்த அப்பல்லோ-7 விண்கலம் 10 நாட்கள் விண்ணில் பயணம் செய்தது. பின் பூமியை சுமார் 163 முறை சுற்றியதும் 1968-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x