Published : 09 Oct 2019 08:53 AM
Last Updated : 09 Oct 2019 08:53 AM
ரஷ்ய இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயர் லியோ டால்ஸ்டாய். இவர் 9 செப்டம்பர் 1828-ம் ஆண்டு பிறந்தார்.
காலம் கடந்தும் அனைவராலும் அவரது எழுத்துக்கள் வாசிக்கப்பட்டு வருகின்றன. நாவல்கள் உட்பட சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், சிறுவர்களுக்கான நீதிக்கதைகளும் எழுதியுள்ளார்.
இவருடைய அன்னா கரீனீனா, போரும் அமைதியும் போன்ற நாவல்கள் புகழ்பெற்றது. டால்ஸ்டாய் இறுதி வரை வன்முறைகளுக்கு எதிராகவே வாழ்ந்து வந்துள்ளார். அந்த நாட்களில் டால்ஸ்டாயின் தாக்கம் காந்தியிடம் இருந்துள்ளது. 1894-ம் ஆண்டு காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்த போது “கடவுளின் அரசாங்கம் உனக்குள் இருக்கிறது” (The Kingdom of God is Within You) என்ற புத்தகத்தை காந்தி படித்த பிறகு, அவர் மீது ஈர்க்கப்பட்டார்.
ஆனால் அவர்கள் இருவரும் இறுதி வரை சந்தித்துக் கொள்ளவே இல்லை. இருவருக்கும் இடையில் கடிதப் போக்குவரத்து இருந்தது. இருவரும் தங்களுக்குள் பரஸ்பர மரியாதையை கொண்டிருந்தனர். 20 நவம்பர் 1910-ம் ஆண்டு டால்ஸ்டாய் இறந்த பிறகு தென் ஆப்பிரிக்காவில் ‘டால்ஸ்டாய் பண்ணை’யை உருவாக்கினார் காந்தி.
இவரது அன்னா கரீனீனா, போரும் அமைதியும் ஆகிய நாவல்கள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT