Published : 19 Jan 2024 05:01 AM
Last Updated : 19 Jan 2024 05:01 AM
‘தி இந்து’ ஆங்கில நாளிதழை தொடங்கிய ஜி.சுப்ரமணியன் 1855 ஜனவரி 19-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருவடியில் பிறந்தார். 1871-ல் தஞ்சையில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மெட்ரிகுலேஷனில் பள்ளிப் படிப்பை முடித்தார். 1879-ல் ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். பின்னர், இந்திய வளத்தை சுரண்டும் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு எம்.வீரராகவாச்சாரியார், டி.டி.ரங்காச்சாரியாருடன் இணைந்து 1878 செப்டம்பர் 20-ம் தேதி ‘தி இந்து’ ஆங்கில இதழை தொடங்கினார். 1898-ம் ஆண்டு வரை உரிமையாளராகவும், மேலாண்மை இயக்குநராகவும், பதிப்பாளராகவும், ஆசிரியராகவும் செயல்பட்டார்.
இந்திய விடுதலை பிரச்சாரத்திற்கான கருவியாக இந்த பத்திரிகையை பயன்படுத்தினார். 1891-ல்
சுதேசமித்திரன் என்ற பெயரில் தமிழ் நாளிதழை தொடங்கினார். தீண்டாமை ஒழிப்பு, குழந்தை திருமண தடை, மறுமணம் ஆகியவற்றை குறித்து பத்திரிகையில் எழுதினார். அதுமட்டுமின்றி, அனைவருக்கும் முன்னுதாரணமாக அவரது இளைய மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT