Published : 09 Jan 2024 04:00 AM
Last Updated : 09 Jan 2024 04:00 AM
அமெரிக்க உளவியலாளர் ஜான் பிராடஸ் வாட்சன் 1878 ஜனவாி 9-ம் தேதி தெற்கு கரோலினா, டிராவலர்ஸ் ரெஸ்ட் என்னும் இடத்தில் பிறந்தார். 16 வயதில் கல்லூாியில் சேர்ந்தவர் 21 வயதில் உளவியலில் பட்டம் பெற்றாா்.
வாட்சன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1903-ம்ஆண்டு முனைவர் பட்டம் பெற்றாா். 1908-ல்ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தவர் உடனடியாக உளவியல் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1910 முதல் 1915 வரை உளவியல் மறு ஆய்வு (Pscychological Review) என்னும் இதழை வெளியிட்டார். வாட்சன் தமது கல்லூாி அனுபவத்தாலும் மற்ற பேராசிரியா்கள் நட்பினாலும் பெரிய உளவியலாளராக உருவெடுத்தாா்.
கண்மூடித்தனமாக அல்லாமல் அறிவியல் அடிப்படையில் உளவியலை மக்கள் ஏற்கும்படி வாட்சன் செய்தார். அவர் மேற்கொண்ட ஆய்வுகளில் முக்கியமானது குழந்தை வளர்ப்பு தொடர்பானதுதான். இவரைக் கண்டித்தவா்கள் கூட, இவர் கருத்துக்கு இருந்த வரவேற்பைக் கண்டு ஆச்சாியப்பட்டனர். வாட்சன், குழந்தை வளர்ப்பிற்கு அளித்த முக்கியத்துவம் மக்களிடையே பிரபமலமானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT