Published : 08 Jan 2024 04:00 AM
Last Updated : 08 Jan 2024 04:00 AM
வரலாற்றில் புகழ்பெற்ற ஐரோப்பிய கடல் பயணிகளில் ஒருவர் மார்கோ போலோ. இவர் 1254-ம் ஆண்டு வெனிஸில் பிறந்தார். கடல் கடந்து வணிகம் செய்வதற்காக 17 வயதில் தந்தையுடன் பட்டுப்பாதை வழியாக பயணத்தை தொடங்கினார் மார்கோ. இந்த வணிகப் பாதை 4 ஆயிரம் மைல்களுக்கு நீண்டு துருக்கியிலிருந்து கிழக்கு சீனா, இந்தியா, பாரசீகம் வழியாகச் சென்றது.
இவர் பயணம் செய்த காலகட்டத்தில் வணிகம் உச்சத்திலிருந்தது. நான்கு ஆண்டுகள் பயணம் செய்து சீனாவை அடைந்தார். சீன பேரரசர் குப்லாய் கானும் மார்கோ போலோவும் நண்பர்கள் ஆகினர். 1295-ல் மார்கோ போலோ வெனிஸுக்குக் கிளம்பினார்.
வெனிஸ் - ஜெனோவா இடையே போர் நடைபெற்றது. ஜெனோவா வீரர்களால் பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார் மார்கோ. அப்போது, ஸ்கெடெலோ டி பிசா என்ற எழுத்தாளரிடம் தன் பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் ‘மார்கோ போலோவின் பயணங்கள்’ என்ற புத்தகத்தை எழுதினார்.
இவர் மூலமே சீனாவைப் பற்றி ஐரோப்பியர்கள் அதிகம் அறிந்துகொண்டனர். உடல்நலக் குறைவால் 1324 ஜனவரி 8-ம் தேதி காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT