Published : 12 Dec 2023 04:00 AM
Last Updated : 12 Dec 2023 04:00 AM

இன்று என்ன? - துள்ளல் பாடல்கள் எழுதிய சோமு

பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் ஆலங்குடி சோமு. இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த ஆலங்குடியில் 1932 டிசம்பர் 12-ம் தேதி பிறந்தார். 1960 முதல் 1997 வரை 80 படங்களுக்கு 200-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 1960-ம் ஆண்டு சின்னப்பதேவரின் யானைப்பாகன் திரைப்படத்திற்காக தனது முதல் பாடலை எழுதினார். தமிழக அரசியலை ஊக்குவிக்கும் வகையில் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை, ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை என்று எழுதினார்.

பொன்மகள் வந்தாள், துள்ளுவதோ இளமை, ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் போன்ற ஏகப்பட்ட துள்ளலான பாடல்களையும், தாய் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, தாய் இல்லாமல் நான் இல்லை, தானே எவரும் பிறந்ததில்லை உள்ளிட்ட பாடல்களையும் எழுதியுள்ளார். பத்தாம்பசலி, வரவேற்பு உள்ளிட்ட படங்களை சொந்தமாக தயாரித்தார். தமிழக அரசு இவரை கவுரவப்படுத்தும் வகையில் 1973-74-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x