Published : 16 Nov 2023 04:00 AM
Last Updated : 16 Nov 2023 04:00 AM
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற போர்ச்சுகீசிய எழுத்தாளர் ஜோஸ் டிசோஸா சரமாகூ. இவர் 1922 நவம்பர் 16-ம் தேதி போர்ச்சுகல் நாட்டின் ரீபாட்டஜோ மாகாணத்தில் அசின்ஹாகா என்ற கிராமத்தில் பிறந்தார். குடும்பச் சூழல் காரணமாக, 12 வயதில் தொழிற்கல்விக் கூடத்தில் சேர்ந்தார். படிப்பை முடித்ததும் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக வேலை செய்தார். பொது நூலகம் சென்று பல புத்தகங்களைப் படித்தார். இவரது முதல் நூலான ‘லேண்ட் ஆஃப் சின்’ 1947-ல்வெளியானது.
1950-களின் இறுதியில் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களை மொழிபெயர்த்தார். ‘பாஸிபிள் போயம்ஸ்’ என்ற கவிதை நூலை 1966-ல் வெளியிட்டார். தொடர்ந்து, ‘பிராபப்ளி ஜாய்’, ‘ஃபிரம் திஸ் வேர்ல்டு டு தி அதர்’, ‘டிராவலர்ஸ் பேக்கேஜ்’ ஆகிய நூல்கள் வெளிவந்தன. 50 வயதுக்கு மேல் இவர் எழுதிய ‘பால்டாஸர் அண்ட் ப்ளிமுண்டா’ (Baltasar and Blimunda) என்ற நாவல் உலக அளவில் அங்கீகாரத்தையும் வாசகர்களையும் பெற்றுத் தந்தது. இந்த நாவலுக்கு போர்ச்சுகீசிய பென் கிளப் விருது கிடைத்தது. 1980-களில் நாவல்கள், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள் என ஏராளமான படைப்புகளை எழுதினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT