Published : 25 Oct 2023 04:00 AM
Last Updated : 25 Oct 2023 04:00 AM
குறுகிய காலமே வாழ்ந்தாலும், கணிதத்தில் மாபெரும் சாதனைகளைப் படைத்த பிரான்ஸ் நாட்டின் கணிதவியலாளர் எவரிஸ்ட் கலுவா. இவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே உள்ள போர்க்லா ரெய்ன் என்ற இடத்தில் 1811 அக்டோபர் 25-ம் தேதி பிறந்தார்.
12 வயது வரை கலுவா தாயிடம் பண்டைய இலக்கியங்களைக் கற்றார். பாரீஸ் நகரப் பள்ளியில் பயின்றார். கணிதத்தின் மேல் ஆர்வம் அதிகமாக இருந்தது. 15 வயதுகூட நிரம்பாத கலுவா கணித மேதை லுஜாண்டரின் வடிவியல் புத்தகம், லாக்ரான்ஸின் இயற்கணித புத்தகம் ஆகியவற்றை நாவல்போல அநாயாசமாகப் படித்து முடித்தார். அடுத்தடுத்த பல கணக்குகளைக்கூட மனக்கணக்காகப் போட்டார்.
17-வது வயதில் ரிட்டர்ட் என்ற கணித ஆசிரியர் இவரது கணிதத் திறமையை உணர்ந்து ஊக்கப்படுத்தினார். தனிப்பட்ட முறையில் கணிதம் சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். தொடரும் பின்னங்கள் (Continued Fraction) பற்றிய தனது முதல் ஆய்வுக் கட்டுரையை 1829-ல் வெளியிட்டார். 1832-ல் ஒருநாள் இரவு மணிக்கணக்காக அவரது கண்டுபிடிப்புகள் அனைத்தையும் தொகுத்து 60 பக்க கட்டுரையாக எழுதினார். ஆனால், அவர் மறைந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகே அது பிரசுரிக்கப்பட்டு கணித உலகில் பிரபலமானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT