Published : 25 Sep 2023 04:00 AM
Last Updated : 25 Sep 2023 04:00 AM

இன்று என்ன? - மரங்களின் தாய்: வங்காரி மாத்தாய்

கென்யாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் வங்காரி மாத்தாய் ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 1940-ல் பிறந்தார். 1964-ல்அமெரிக்கா சென்று, உயிரியலில் பட்டம் பெற்றார். பிட்ஸ்பர்க் பல்கலையில் கால்நடை உடற்கூறு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1971-ல் கென்யாவிலேயே டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண் இவரே.

1977-ல் பேராசிரியர் பணியை துறந்து, மரம் வளர்ப்பில் களமிறங்கினார். 30 ஆண்டுகளில் 3 கோடி மரங்கள் வளர்க்க இலக்கு நிர்ணயித்தார். பெண்களை திரட்டி, சமூகப் பணிகளில் ஈடுபடுத்தி 5 கோடி மரங்களுக்கு மேல் நட்டுள்ளார்.

தேசிய மகளிர் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்றார். நைரோபியில் பூங்காவை அழித்து, 62 மாடிக் கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியை, போராட்டம் நடத்தி கைவிடச் செய்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ‘கோல்ட்மேன்’ விருது பெற்றார். 2004-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்ற பெருமையை பெற்றார். 2007-ல் இந்திய அரசு இவருக்கு ‘இந்திரா காந்தி’ விருது வழங்கி கவுரவித்தது.

காடு வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு என மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த வங்காரி மாத்தாய் 2011 செப்டம்பர் 25-ல் தனது 71 வயதில் காலமானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x