Published : 25 Aug 2023 04:00 AM
Last Updated : 25 Aug 2023 04:00 AM
ஆசிய சாம்பியன்ஷிப்பிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். ஹரியானா சர்கிதாத்ரி கிராமத்தில் 1994 ஆகஸ்ட் 25-ம் தேதி பிறந்தார். 2013-ல்புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 52 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2014-ல் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். 2015-ல் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார்.
2018 கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் தங்கம் வென்றார். 2019 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 53 கிலோ எடைப்பிரிவில் உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்றார். 2021-ல் போலந்து ஓபனில் 53 கிலோ பிரிவில் போகட் தங்கம் வென்றார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT