Published : 23 Aug 2023 04:01 AM
Last Updated : 23 Aug 2023 04:01 AM
தமிழ் எழுத்தாளர், இதழியலாளர் வ.ராமசாமி 1889-ம் ஆண்டு தஞ்சாவூரின் திருப்பழனத்தில் பிறந்தார். கிராமத் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி படித்தார். அறிஞர் அண்ணா தனது திராவிடநாடு பத்திரிகையில் வ.ராவை "அக்கிரகாரத்து அதிசய மனிதர்" என்று வர்ணித்தார்.
தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், கைம்பெண் திருமணம், பெண்கல்வி போன்ற கருத்துகளைப் புதினங்களாக எழுதினார். 1914-ல்தஞ்சையிலிருந்து வெளிவந்த சுதந்திரன் பத்திரிகை ஆசிரியரானார். பிறகு பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றினார். இவர் வாழ்க்கையில் பெரிய திருப்பம் என்பது மணிக்கொடி பத்திரிகையில் ஆசிரியராக இருந்தது.
கல்கி, புதுமைப்பித்தன் போன்ற இளம் எழுத்தாளர்களை இப்பத்திரிக்கை மூலம் ஊக்குவித்தார். 1930-ம்ஆண்டு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக 6 மாதம் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து கொண்டே, ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு பின்னாளில் "ஜெயில் டயரி" என்ற பெயரில் நூலாக வெளி வந்தது. சிறந்த எழுத்தாளரான இவர் 1951 ஆகஸ்ட் 23-ம் தேதி காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT