Published : 14 Aug 2023 04:00 AM
Last Updated : 14 Aug 2023 04:00 AM

இன்று என்ன? - மதுரை காந்தி சுப்பராமன்

காந்தியவழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட நா. ம. ரா. சுப்பராமன் 1905 ஆகஸ்ட் 14-ம் தேதி மதுரையில் பிறந்தார். ரவீந்திரநாத் தாகூர் கொல்கத்தாவில் நடத்திய சாந்திநிகேதனில் பயின்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கேற்று சிறை சென்ற இவர் “மதுரை காந்தி“ என அழைக்கப்பட்டார்.

மதுரை நகராட்சியின் தலைவராக 1935-1942 வரை பதவியில் இருந்தார். “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தார். 1939-ல்தாழ்த்தப்பட்டவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழையும் போராட்டத்தில் மதுரை. அ.வைத்தியநாதய்யருடன் துணை நின்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உறைவிடப் பள்ளிகள் நிறுவினார்.

தனக்கு சொந்தமான இடத்தை மதுரை மாநகராட்சிக்கு தானமாக அளித்து அங்கு மகப்பேறு மருத்துவமனை கட்ட உதவினார். மதுரை மாநகராட்சி நிர்வாகம் இந்த மருத்துவமனைக்கு, என்.எம். ராயலு அய்யர் மகப்பேறு மருத்துவமனை எனப்பெயர் சூட்டி கவுரவித்தது. சுப்பராமன் நினைவாக தபால் தலையை இந்திய அஞ்சல் துறை 2005-ல் வெளியிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x