Published : 09 Aug 2023 04:00 AM
Last Updated : 09 Aug 2023 04:00 AM
மலையாள எழுத்தாளர், ஞானபீட பரிசு பெற்றவர் எம். டி. வாசுதேவன் நாயர். இவர் 1933 ஆகஸ்ட் 9-ம் தேதி கேரளா பாலக்காடு கூடலூரில் பிறந்தார். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் படித்தார். சிறுவயதிலேயே மாத்ருபூமி வார இதழில் எழுதினார். மாத்ருபூமி இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் "வளர்த்த மிருகங்கள்" என்ற சிறுகதைக்கு பரிசு பெற்று பிரபலமானார்.
1958-ல் மாத்ருபூமியின் உதவியாசிரியரானார். இவரின் முதல் நாவல் ’பாதிராவும் பகல்வெளிச்சமும்’. இது தொடராக வெளிவந்தது. இவரது முதல் நூல், ‘நாலுகெட்டு’. இதற்கு கேரள சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவர் எழுதிய ’முறப்பெண்ணு’ என்ற சிறுகதை 1963-ல் திரைப்படமாக வெளிவந்து வெற்றிப்படமானது.
’அக்ஷரங்கள்’ என்ற திரைப்படம் அவரது சொந்த வாழ்க்கை என்று சொல்லப்படுகிறது. 1973-ல்நிர்மாலியம் என்ற முதல் படத்தை இயக்கினார். இப்படம் ஜனாதிபதி விருது பெற்று சாதனை படைத்தது. 1995-ல் ஞானபீட விருதும், 2005-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT