Published : 02 Aug 2023 04:00 AM
Last Updated : 02 Aug 2023 04:00 AM
இதழாளரும் ஆய்வாளருமான சேவியர் தனிநாயகம் அடிகள் இலங்கை யாழ்ப்பாணம் கரம்பொன் கிராமத்தில் 1913 ஆகஸ்ட் 2-ம் தேதி பிறந்தார். புனித அந்தோனியார் பள்ளியில் தொடக்கக் கல்வி முடித்தார். பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் முறையாக தமிழ் பயின்றார்.
இவரது தமிழ் அறிவின் ஆழத்தை கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இரத்தினசாமி, தெ.பொ. மீ. ஆகியோர் இளநிலைப் படிப்பை முடிக்காமலே நேரடியாக முதுகலை பட்டப்படிப்பில் சேர அனுமதித்தனர்.
ஆங்கிலக் காலாண்டு இதழான தமிழ்க் கலாச்சாரத்தை 1951-ல் தொடங்கினார். இவ்விதழ் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் வரை சென்றது. 1961-ல்மலாய் பல்கலையில் தமிழ் பேராசிரியரானார். உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம், 1964-ல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவை அமைய காரணமானார். தனது பயண அனுபவங்களை ‘ஒரே உலகம்’ என்ற புத்தகமாக 1963-ல் வெளியிட்டார். 2013-ல் அவரைப் பற்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ‘தமிழின் தூதுவர்’ ஆவணப்படம் எடுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT