Published : 25 Jul 2023 04:00 AM
Last Updated : 25 Jul 2023 04:00 AM

இன்று என்ன? - கண் மூடி எழுதிய அறிஞர்

தமிழக அரசின் திரு.வி.க. விருது பெற்றவர் இரா.இளங்குமரனார். நெல்லை மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்தார். சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூர் பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது.

புலவர் படிப்புக்கான தேர்வு எழுதி, 1951-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். அதுவரை முழுமையாக கிடைக்கப்பெறாத குண்டலகேசி காப்பியத்தை தனது கற்பனையில் விரித்து எழுதி முடித்தார். அந்நூலினை 1958-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார். 1963-ல் எழுதிய திருக்குறள் கட்டுரை தொகுப்பு நூலை பிரதமர் நேரு வெளியிட்டார்.

காரைக்குடியில், சங்க இலக்கிய நூல்களைத் தொகுத்தபோது புறநானூற்றை எளிய தமிழில் 2003-ல் வெளியிட்டார். திருச்சியில் திருவள்ளுவர் தவச்சாலையில் 45,000 நூல்கள் கொண்ட நூலகத்தை நடத்தினார்.

பிற்காலத்தில் அதில் 40 ஆயிரம் நூல்களை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கினார். கண்பார்வை பறிபோய்விட்டால் எழுத்துப் பணி பாதிக்கப்பட்டுவிடும் என்பதற்காக கண்களை மூடியே எழுதும் திறனை வளர்த்துக்கொண்டார். 1978-ல்நல்லாசிரியர் விருது பெற்ற இவர் 2021 ஜூலை 25-ம் தேதி காலமானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x